Saturday, May 30, 2009

நான் யார்

ஓரிடம் நில்லாது
காலம் இடம்
கடந்த
நான் என்ன கிறுக்கனா ?

கடல் கடந்து
ஆகாயம் கிழித்து
பிரபஞ்சத்தை சடுதியில் கடக்கும்
நான் என்ன
கடவுளா?

இல்லை நான்
வெறும்
கவிஞன் தான்...



Friday, May 29, 2009

மௌனக்கேள்வி

மௌனம் ஒரு மகத்தான மொழி
மௌனமே அதை சொன்னால்
எப்படி அது மௌனமாகும் !!!

Wednesday, May 27, 2009

ஆண்மை

இதயத்தில் அடைமழை
அடக்கத்தால் அதன் சாரல்
விழிகளில் ...