Sunday, July 26, 2009

பார்வைகள் பலவிதம்

தெருவில்

இறங்கி நடக்கிறேன்

பெருங்கூட்டத்தின் சிறு புள்ளி நான்

ஒளிக்கீற்றுகள் போல்

என்னை தாக்கி மறைகின்றன பார்வைகள்

துணிக்கடையைத் தாண்டினேன்

என் சட்டை அளந்தது ஒன்று...

செருப்புக்கடையை நெருங்கினேன்

என் கால் நீளத்தை நெருடியது ஒன்று...

சலூன் கடையைக் கடந்தேன்

என் தலைமுடியின் நீளத்தை அளந்தது ஒன்று...

என் அடுத்த வரவை

எதிர்பார்த்த ஏக்கப் பார்வைகள்...

தொடர்ந்து நடந்தேன்

சுடுகாட்டைக் கடந்தேன்

வெட்டியான் என்னை வெறித்தான்...

கனவின் மறுபக்கம்

கனவின் மறுபக்கம்

தூங்கும்போது வருவதுதான்

கனவு

தூங்கவிடாமல் செய்வதற்கு

ஏன்

கனவென்று பெயர்