Sunday, May 3, 2009

ஒரு முற்றுபுள்ளியின் லட்சியம்

ஒரு முற்றுபுள்ளியின் லட்சியம்...


இந்த உலகம் என்னை வெறித்து பார்க்கிறது
நான் பிறந்தது மரிப்பதற்கா வாழ்வதற்கா


இறப்பதற்கு முன் ஒரு முறையாவது வாழ்ந்துவிடவேண்டும்...!


என் குறிக்கோள் ஒரு முடிவின் ஆரம்பம்
முடிவை அறிவிக்க வீழ்பவன் நான்
ஆனால்

சிறு முடிவை அறிவிக்கும் புள்ளியாய்
நான் சாய்வேனோ...


ஒரு சரித்திரத்தின் சரித்திரத்தை அறிவித்து
வீழ்ந்தால் நான் வாழ்ந்தது வாழ்க்கை
இல்லை என்றால்

வாழும்போதே நான் செத்த பிணம்...

1 comment:

  1. ஒரு உயிரிதான் சாகும். பிணம் சாகமாட்டாது.
    செத்த பிணம் என்பது ஒரு கவிஞனுக்கு அபத்தம்1

    ReplyDelete