தெருவில் இறங்கி நடக்கிறேன்
பெருங்கூட்டத்தின் சிறு புள்ளி நான்
ஆனாலும் ஒளிக்கீற்றுகள் போல்
என்னை தாக்கி மறைகின்றன
பார்வைகள்...
துணிக்கடையைத் தாண்டினேன்
என் சட்டையின் அழகினை
அளந்தது ஒன்று ...
செருப்புக்கடையை நெருங்கினேன்
என் கால்களின் நீளத்தை
நெருடியது ஒன்று...
சலூன் கடையைக் கடந்தேன்
என் தலைமுடியின்
நீளத்தை அளந்தது ஒன்று...
எல்லாம் என் அடுத்த வரவை
எதிர்பார்த்த ஏக்கப் பார்வைகள்...
தொடர்ந்து நடந்தேன்
சுடுகாட்டை நடந்து கடந்தேன்
என்னுடலைத் துளைத்தது ஒரு பார்வை
வெட்டியான் என்னை வெறித்தான்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment